கிழக்கு மாகாண கெளரவ ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களின் ஏற்பாட்டில் பொங்கல் விழா அம்பாரை மாவட்டத்திலுள்ள 18 உள்ளுராட்சி மன்றங்களின் பங்குபற்றுதலுடன் 10.01.2024 ல் அம்பாரையில் நடைபெற்றது. அந் நிகழ்வில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபை 4 வெற்றி கிண்ணங்களையும் சுவீகரித்துக் கொண்டது.
இதற்கமைய சிறப்பான பொங்கல் போட்டிக்கான 1ம் இடத்தினையும், கோலம் போடுதல் மற்றும் பூமாலை கட்டுதல் போட்டிகளில் 2ம் இடங்களையும், தனி பரதநாட்டிய போட்டியில் 3ம் இடத்தினையும் பெற்று வெற்றி கிண்ணங்களை தனதாக்கிக் கொண்டது.