உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தினம்
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 76 வது சிரார்த்த தினம் காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று 19.07.2023 புதன் கிழமை காலை 8.30 மணிக்கு விபுலானந்த சதுக்கத்தில் இடம் பெற்றதுடன் அங்கு அமையப் பெற்றுள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
மேலும்,இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் க.ஜெயராஜீ அவர்களுடன், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த பணிமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.