வட்ஸ்அப் (Whatsapp) இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று அதற்கான தீர்வுகளை உடன் வழங்கும் வகையில் புதிய நடைமுறை
காரைதீவு பிரதேச சபை செயலாளர் A. சுந்தரகுமார் அவர்களின் வழிகாட்டுதலிற்கமைவாக இனிவரும் காலங்களில் Whatsapp ஊடாக தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் நேரடியாக பிரதேச சபைக்கு வருகைதந்து முறைப்பாடுகளை பதிவு செய்வதில் ஏற்படும் அசெளகரியங்களை குறைத்து மக்களினுடைய தேவைகளை மிகவும் இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 074143 4646 எனும் வட்ஸ்அப் (Whatsapp) இலக்கம் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று அதற்கான தீர்வுகளை உடன் வழங்கும் வகையில் புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தி முன்னெடுத்து வருகின்றோம்.