27/10/2023
கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்
காரைதீவு பிரதேச சபையின் 3ம் காலாண்டிற்கான உள்ளக கணக்காய்வு முகாமைத்து குழுக் கூட்டமானது 2023.10.13ஆந் திகதி பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் அலுவலக கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தேசிய கணக்காய்வாளர், ஆய்வு உத்தியோகத்தர் மற்றும் குழுவில் அங்கம் வகிக்கும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.