காரைதீவு பிரதேச சபைக்கு சிறந்த கணக்கீட்டு முகாமைத்துவத்திற்கான விருது
இலங்கை பொது நிதி கணக்காளர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான விருது வழங்கும் நிகழ்வின் போது சிறப்பான கணக்கீட்டு முகாமைத்துவத்திற்கான விருது காரைதீவு பிரதேச சபைக்கு கிடைத்துள்ளது. கடந்த வருடத்தில் பிரதேச சபையின் கணக்கு முகாமைத்துவத்தை சிறப்பாக அறிக்கையிட்டதற்கான சிறப்பு விருதினை பிரதேச சபையின் செயலாளர் அ.சுந்தரகுமார் மற்றும் நிதி உதவியாளர் எம்.யூ.எம்.சபீக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.