ஜுன் 05 சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலாளரும் காரைதீவு பசுமைக்கிராம கழகத்தின் தலைவருமான திரு.எஸ்.ஜெகராஜன் சேர் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் காலை காரைதீவு-09 ம் பிரிவில் வெட்டு வாய்க்கால் முகத்துவாரத்தினை அண்டிய பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன் சேர் அவர்களும்,பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களும், கிராம சேவகர்களும், சுகாதார வைத்திய அதிகாரி, சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார பரிசோதகர்கள், காரைதீவு பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் காரைதீவு பசுமைக் கழக உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.